NAITA (தேசிய தொழில்துறை பயிற்சி ஆணையம்) நிறுவனத்தின் தலைவராக நிந்தவூர் அப்துல் சத்தார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டதாரிகள் மற்றும் தொழில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி மற்றும் மேம்பாட்டை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகிய NAITA-வில் இவரின் நியமனம் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
அரசாங்க துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட இவர், அதில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியையும் சிறப்பாக வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், மற்றும் முறைப்படுத்தப்பட்ட தலைமைத் திறன்கள் எப்போதும் அனைவருக்கும் ஒரு மூலதனமாக இருந்தன.
இவ்வண்மைத் திறன்களுடன், NAITA நிறுவனத்தை மேலும் உயர்வுக்குக் கொண்டு செல்ல அவரின் அனுபவமும்,ஆழ்ந்த பகுப்பாய்வுத் திறன்களும் துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த புதிய பதவியில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம்.
@CM