Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லங்கா டி10 சுப்பர் லீக்; கோல் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது!


லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் 'கோல் மார்வெல்ஸ்' அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர் பல்லேகல பிரதேசத்தில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவரை ஆட்ட நிர்ணயத்திற்காக அணுகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


@CM

ads