Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த கலை இலக்கியப்பேரவை தலைவர், கவிஞர், டாக்டர் ஏ.எம். ஜாபிர் அவர்கள் இலங்கை அரசின் 39ஆவது கலாபூஷணம் இலக்கிய விருதை பெற்றுக்கொண்டார்.


கலாபூஷணம் இலக்கிய விருது கவிஞர் டாக்டர் ஏ.எம். ஜாபிர் பெற்றுக்கொண்டார்.


நிந்தவூர் கலை இலக்கியப்பேரவை தலைவர், கவிஞர், டாக்டர் ஏ.எம். ஜாபிர் அவர்கள் இலங்கை அரசின் 39ஆவது கலாபூஷணம் இலக்கிய விருதை பெறும் பெருமையை பெற்றுள்ளார்.


இவரது இலக்கியத்துறையின் சிறப்பையும், தமிழ் மொழிக்கான அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அரச விருது வழங்கல் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.


கவிஞர் டாக்டர் ஏ.எம். ஜாபிர் அவர்களின் இலக்கிய சாதனைகள் தமிழ் மொழி உலகத்திற்கு மகத்தான பங்களிப்பாக விளங்குகின்றன. இவரது இந்த வெற்றி நிந்தவூர் மக்களின் பெருமையை உயர்த்தி நிற்கிறது.


இவரை அங்கீகரித்து விருது வழங்கிய இலங்கை அரசுக்கும், இவரது சீரிய முயற்சிகளுக்குத் தகுந்த மதிப்பளித்த அனைவருக்கும் நிந்தவூர் சமூகத்தின் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.


அவரது எதிர்கால இலக்கிய பணி மேலும் மலர சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads