Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அரிசி இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு ரூ.430 கோடி வருமானம்!


பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சில பிரதேசங்களில் இன்னும் பல வகையான அரிசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 


இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்கத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.


தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்ட 67,000 மெற்றிக் டன் அரிசி மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads