Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நேருக்கு நேர் மோதிய பாரவூர்திகள்; ஒருவர் பலி, 5 பேர் வைத்தியசாலையில்!


அனுராதபுரம் பாதெனிய பிரதான - வீதியின் தம்புத்தேகம பகுதியில் இன்று (14) காலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்தனர்.


தம்புத்தேகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய ரக பாரவூர்தியொன்றும் அனுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.


விபத்தில் சிறிய ரக பாரவூர்தியில் பயணித்த ஒருவரே உயிரிழந்தார்.


விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் ஏனைய நால்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


@CM

ads