Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தகுதியுடைய ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் 6,000 ரூபாவை வழங்க நிதியமைச்சு கவனம்!


அஸ்வெசும திட்டத்தில் உளவாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.


இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குமாறு கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையிலே, மாணவர்களுக்கும் குறித்த உதவித்தொகையினைவழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, சந்தையில் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக பெற்றோர்களினால் குற்றம் சுமத்தப்படுகிறது. 


@CM

ads