Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!


எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 


எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.


"பெப்ரவரியிலிருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். 


இந்த அரசாங்கம் எமக்கு வாகன இறக்குமதியை அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது.


வாகனங்களை வழங்கத் தயாராக உள்ளோம்.


மேலும், இதன் மூலம் மக்கள் நியாயமான விலையில் வாகனத்தைப் பெற முடியும்.


வாகன இறக்குமதிக்கான விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்காக நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. 


இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 4 வருடங்களாக அனாதரவாக உள்ளனர்.


இங்குள்ள வியாபாரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads