Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்முனை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!


விடுதி அறை மலசல கூடத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டிருந்தது.


இதன் போது மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பெரிய நீலாவணை 02 செல்லத்துரை வீதி பகுதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான 54 வயது மதிக்கத்தக்க பூசாரி சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தற்போது உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு குறித்த சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டார்.


இதன் போது துணி ஒன்றினை பயன்படுத்தி தூக்கு மேற்கொண்டு தற்கொலை செய்தமைக்கான அடையாளம் தென்பட்டுள்ளதாகவும் கழுத்து எழும்பு முறிவடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையிடப்பட்டு உறவினர்களிடம் சடலம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது.


மேலும் இம் மரணம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றதா அல்லது வேறு ஏதாவது விடயத்திற்காக மரணம் சம்பவித்துள்ளதா என மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-பாறுக் ஷிஹான்-


@CM

Tags

ads