Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!


உலுக்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் நேற்று (21) காலை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தார்.


உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads