Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளியான தகவல்!


நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்று ஊடக சந்திப்பில்,


யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெற்றிக் டன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பல் மீள அனுப்பப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அந்த கப்பலில் 15 மெற்றிக் டன் பெற்றோலும் 15 மெற்றிக் டன் டீசலும் இருந்துள்ளது.


உண்மையிலேயே இந்தக் கப்பல் கனியவள எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிப்பதற்காக நாட்டுக்குள் பிரவேசிக்கவில்லை.


இந்த கப்பல் திரும்பிச் சென்றதன் காரணமாக இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் தொகை காணப்படுகின்றது.


ஆகவே, நெருக்கடி இன்றி எரிபொருளை விநியோகிக்க முடியுமென கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads