Type Here to Get Search Results !
Developed by Cleverbit

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!


எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இறுதி செய்ய பொதுவாக 4 மாதக்காலங்கள் தேவைப்படுகின்றன. 


அதனைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என நினைகிறேன் என அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.


@CM

ads