Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!


வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படத்தையடுத்து, வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுட்டு தீவு. 


தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டுக்கு 54 கிலோமீற்றர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


இது ரிக்டர் அளவில் 7.3 7.3 மெக்னிடியூட் ஆகப் பதிவாகி உள்ளது.


வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.


இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கிலோமீற்றர் தொலைவில் 43 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கி உள்ளது.


இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. 


@CM

Tags

ads