Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று முதல் ஜெய் ஷாவின் தலைமையில் ICC!


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.


2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, இன்று (01) முதல் ஐ.சி.சி தலைவராக பொறுப்பேற்றார். 


முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார்.


2020ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.


கடந்த நவம்பர் 30ஆம் திகதி அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. 


இதனையடுத்து ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.


35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐசிசி தலைவரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


@CM

ads