Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.


தாயார் சமையல்வேளையில் ஈடுபட்டிருந்தவேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது.


மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது, உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து, குழந்தையை மீட்டு, கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளபோதும் குழந்தை உயிரிழந்துள்ளது.


@CM

Tags

ads