Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காதலியை கொலை செய்து விட்டு உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த காதலன்!



காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்திய காதலன் தொடர்பான சம்பவமொன்று இரத்தினபுரி அலபாத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.


ஒரே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞன் பெண்ணின் வீட்டினுள் பதுங்கியிருந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், அதே இடத்தில் அவரும் விஷம் அருந்திவிட்டு, போத்தலையும் அங்கேயே வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடியுள்ளான்.


ஓடும்போது கிராமத்திலுள்ள வயலில் விழுந்து கிடந்த குறித்த இளைஞனை கிராம மக்கள் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


@CM

Tags

ads