Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சீனாவில் பரவும் புதிய வைரஸ்; இலங்கைக்கும் எச்சரிக்கை!


சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


HMPV (Human Metapneumo Virus) என்ற புதிய வைரஸால் சுவாச நோய் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கொவிட்-19 தொற்றின் அறிகுறிகளைப் போலவே இந்த நோயின் அறிகுறிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து பரவிய கொவிட் -19 வைரஸ் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்திருந்தது.


இந்நிலையில் சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.


குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.


இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் பல மருத்துவமனைகளில் நிரம்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


@CM

Tags

ads