Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு!

Top Post Ad


இன்று (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, வானிலுள்ள 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வைக் காண முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இதன்படி இன்று முதல் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை ஒரே நேர்கோட்டில் அவதானிக்க முடியும்.


குறித்த அபூர்வ நிகழ்வு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணிவரை வானில் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் யுரேனஸ், நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களைத் தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும் இவ்வாறான வானியல் நிகழ்வைக் காண முடியும் என குறிப்பிடப்படுகின்றது.


இதனைத் தொடர்ந்து 2040 ஆம் ஆண்டிலேயே இது போன்ற அரிய வானியல் நிகழ்வை அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


@CM

Tags

ads