Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!


நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக் கூடும்.


நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். 


கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.


@CM

Tags

ads