Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வனப்பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்!


பன்னல கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று (19) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி கண்டெடுக்கப்பட்டதாக ஒன்று பன்னல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


37 வயதுடைய ஆண் ஒருவரும், 32 வயதுடைய பெண் ஒருவரினுடைய சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த ஆண் இராணுவ வீரர் என்றும், அந்தப் பெண் ஒரு ஆசிரியர் எனவும் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பன்னல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads