Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த 21 வயதான தவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.


சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads