Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முச்சக்கர வண்டியும் ,உந்துருளியும் மோதி விபத்து; இருவர் காயம்!


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சாரதி பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியுடன், அதே திசையில் பயணித்த உந்துருளி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.


இந்த விபத்தில், உந்துருளியில் பயணித்த இருவரே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


@CM

ads