இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் 07/01/2025 ல் கொழம்பு BMICH ல் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் நிந்தவூரை சேர்ந்த ஹாரிஸ் ஜப்பார் சட்டமாணி (LL.B) பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் கணக்கீட்டு உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் ஒரு கணக்கியல் பட்டதாரியும் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
பிரபல அரசியல், சமூக செயற்பாட்டாளரான இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் மத்திய குழுவின் செயலாளராகவும், கமு/கமு/ அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் SDEC உறுப்பினராகவும், நிந்தவூர் முத்தக்கீன் விளையாட்டு கழகத்தின் உப தலைவராகவும், நிந்தவூர் அல் - பர்ஹான் சனசமூக நிலையத்தின் பொருளாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் எதிர்காலத்தில் சட்டத்துறையில் பிரகாசிக்க சிட்டிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
@CM