Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தில் ஓவியத் துறையில் நிந்தவூரைச் சேர்ந்த மசூர் மின்ஹாஜ் ஹுசைன் சுவதம் விருது பெற்றார்!


நிந்தவூர் கலை, இலக்கிய பேரவியின் இளம் உறுப்பினர்களுக்கு கலாசார அமைச்சின் சுவதம் விருது


நிந்தவூர் கலை, இலக்கிய பேரவையின் உறுப்பினரான மின்ஹாஜ் ஹுசைனுக்கு கலாசார அமைச்சின் "கலைஞர் சுவதம்" விருது வழங்கப்பட்டது.


நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் அவர்கள் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்த விருது, கலை மற்றும் இலக்கியத்துறையில் அவர்கள் வழங்கிய முக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு இளைஞர்களின் சாதனையை பாராட்டினர்.


மின்ஹாஜ் ஹுசைனுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads