Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரைச் சேர்ந்த கணக்காளர் ஹாறூன் அவர்கள் தேசிய ரீதியான அரச கணக்காளர் சேவைச் சங்கத்தின் துணைத் தலைவராக தெரிவு!

 


நாடளாவிய ரீதியில் இலங்கை கணக்காளர் சேவையில் (SLAcS) உள்ளவர்களைக் கொண்ட, அரச கணக்காளர் சேவைச் சங்கத்தின் இன்று (2025.02.08) Zoom தொழிநுட்பம் மூலம் நடைபெற்ற வருடார்ந்த பொதுச் சபைக் கூட்டத்தில் (AGM) கணக்காளர் ஹாறூன் அவர்கள் இத் தேசிய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை கணக்காளர் சேவையில் கடமையாற்றும் இவர், லாகுகல பிரதேச செயலத்தின் நீண்ட காலமாக கணக்காளராகவும், பொத்துவில் பிரதேசத்தின் பதில் கணக்காளராகவும் இன, மத பேதமற்று அனைவருடனும் நல்ல முறையில் பழகுவதுடன், சிறந்த நன்மதிப்பினையும் பெற்று சிறப்பாக சேவையாற்றுகிறார்.


கணக்காளர் ஹாறூன் அவர்கள் இத் தேசிய ரீதியான அரச கணக்காளர் சேவைச் சங்கத்தின் தமிழ் பேசும் ஒருவராக இவ்வுயர் பதவியில் கணக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும். இது அவரது திறமையினையும், சிறந்த ஆளுமையினையும் கொண்டிருப்பதனை வெளிப்படுத்துகிறது.


@CM

Tags

ads