Type Here to Get Search Results !
Developed by Cleverbit

விவசாயத்திற்கு பயன்படும் கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்!



வடக்கு மாகாண விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்துள்ளார்.


எனவே விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினி போத்தல்களை சூழலில் வீசாது அவற்றை தமது தோட்டுப்புறங்களில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டால் அவற்றை விவசாயத் திணைக்களம் கொள்வனவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக வட மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாய நிறுவனங்கள் இணைந்து இதனை மீள் சுழற்சி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த போத்தல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.


எனவே மண்ணை வளப்படுத்தி அடுத்த சந்ததியினக்கு சுத்தமான சூழலைக் கையளிக்க வேண்டியது அனைவரினதும் தலையாய கடமை என்றும் வட மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads