Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீர்க் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்!


எதிர்வரும் நாட்களில் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


மின்சாரக் கட்டணக் குறைப்புடன் ஒப்பிடுகையில் நீர்க் கட்டணத்தைக் குறைக்க முடியாது என்ற போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவதானம் செலுத்துவதாக அதன் தலைவர் தீப்த சமரசேகர தெரிவித்துள்ளார்.


நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அதனை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பித்து, நீர்க் கட்டணம் குறைக்கப்படும் சதவீதம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads