Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!


வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.


அதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்குப் பதிலாக மார்ச் 01 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.


@CM

ads