Type Here to Get Search Results !
Developed by Cleverbit

36 பில்லியன் ரூபாய் EPF நிதி செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை!


 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை வைப்புச் செய்யவில்லை என பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


அதன் பெறுமதி 36 பில்லியன் ரூபாய் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். 


நாடளாவிய ரீதியில் 22 ஆயித்து 450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நிதியை செலுத்தவில்லை. 


தற்போது 36 பில்லியன் ரூபாய் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்தவேண்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.


@CM

Tags

ads