Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடந்த வருடத்தில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆகப் பதிவு!


கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அவற்றில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள் மற்றும் 250 குழந்தை நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


கூடுதலாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தாலும் காசநோயினால் ஏற்படும் இறப்புக்களை 95 சதவீதத்தாலும் குறைப்பதே எமது நோக்கமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல் லேசான காய்ச்சல், உடல் எடை இழப்பு,பசியின்மை, இரவில் வியர்த்தல் சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவை காசநோயின் அறிகுறிகள் ஆகும்


இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள் உடனடியாக வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads