Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்!


சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் (SUIT) கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ஆதித்யா L1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, PSLV C-57 ரொக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.


மொத்தம் 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள L1 எனும் லாக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய சுற்றுப் பாதையில் அந்த விண்கலம் கடந்த ஆண்டு நிலைநிறுத்தப்பட்டது.


அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.


இந்நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் (SUIT) எனப்படும் ஆய்வுக் சூரியனின் கருவி மூலம் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு உமிழ்வை ஆதித்யா விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு கதிர் ஆற்றல் வெளிப்படும்.


அத்தகைய ஒளி வெடிப்பு அண்மையில் சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் (SUIT) கருவி காட்சிப்படுத்தியுள்ளது.


@CM

Tags

ads