Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் தாக்கம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!


நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம், வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் மற்றும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


@CM

Tags

ads