Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்த நடவடிக்கை!


போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.


வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை மிக விரைவில் செலுத்த முடியும் என இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் ஹர்ஷ புரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, இது குறித்த அடிப்படை பணிகள் நிறுவனத்தால் முடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் Govpay யை அறிமுகப்படுத்தியபோது, 16 அரச நிறுவனங்கள் இருந்ததாகவும்,இன்றைய நிலவரப்படி, 25 நிறுவனங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில் ஒவ்வொரு வாரமும், தாங்கள் புதிய அரச நிறுவனங்களை இணைத்து வருவதாக ஹர்ஷ புரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads