Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44% வரி விதிப்பு!


உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.


அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.


2024 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து அமெரிக்கா 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.


மேலும், வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26% பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. 


@CM

Tags

ads