Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் ஏ. எல். ஜஃபர் அவர்கள் இன்றுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்!


ஜனாப் ஏ. எல். ஜஃபர் தனது 34 வருட சேவைக் காலத்தில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர் பிரதேச செயலகங்களில் மாசில்லா சேவையாற்றி இருக்கின்றார்.


இறுதியாக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய இன்றுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


இவர் எமது சிடிசன் மீடியாவின் ஆலோசகராக இருந்து பல ஆலோசனைகளை வழங்கி பக்க பலமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் அனைவரோடும் சினேகபூர்வமாக பழகி வினைத்திறனோடு செயலாற்றக்கூடிய ஒருவர்.


இவ்வேளையில் அன்னாரின் ஓய்வுகாலம், ஆரோக்கியமிக்கதாவும், மகிழ்வு நிறைந்ததாகவும், மன நிறைவுடையதாகவும் அமைய சிடிசன் மீடியா சார்பாக பிரார்த்திக்கின்றோம்.


@CM

Tags

ads