Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!


நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


அத்துடன், பிரதான வீதிகள், விளையாட்டு மைதானங்கள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நீர் நிரம்பியதால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், நுவரெலியா கண்டி, நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளின் போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


@CM

Tags

ads