Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சென்னை - கொல்கத்தா போட்டிக்கான அனுமதி சீட்டு விற்பனை ஆரம்பம்!


இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறும் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில் அதற்கான அனுமதிச் சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.


சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியின் ஆரம்ப நுழைவு கட்டணமாக 1,700 இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் 2,500, 3,500, 4,000 மற்றும் 7,500 இந்திய ரூபாய் வரையில் நுழைவுச் சீட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஒருவருக்கு இரு நுழைவு சீட்டு மட்டுமே வழங்கப்படும் என சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பங்கு கொண்ட 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

ads