Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசக்கூடும் சாத்தியம்!


நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 


புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த கடற்பிராந்தியங்களில் கடலானது சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


@CM

Tags

ads