Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று இடியுடன் கூடிய மழை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். 


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


@CM

Tags

ads