Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடற்பிராந்தியங்களில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்


நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


இதன்படி, மணித்தியாலத்துக்கு காற்றானது முதல் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.


சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும்.


குறித்த கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


@CM

Tags

ads