Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பகிடிவதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு!


சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டார்.


புஸ்ஸல்லாவை - இஹலகம் பகுதியைச் சேர்ந்த சரித் டில்ஷான் என்ற இளைஞனே நேற்று (30) தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.


உயிர்மாய்ப்பு செய்து கொள்வதற்கு முன்னர் அவர் ஒரு கடிதத்தை எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 


அக்கடிதத்தில், அழுத்தம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.


குறித்த மாணவன் பகிடிவதைக்கு உள்ளாகி வந்ததாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads