Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக புதிய பாதுகாப்பு நடைமுறை!


நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.


அதற்கமைய, 6 மணி நேரத்திற்கும் மேலான எந்தவொரு நீண்ட தூர பயணத்திற்கும், 2 வெவ்வேறு பேருந்து சாலைகளின் ஒருங்கிணைப்புடன் 2 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன அறிவித்துள்ளார்.


சாரதிகளின் சோர்வைக் குறைத்து சிறந்த மேற்பார்வையை உறுதி செய்வதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


போக்குவரத்து துறைசார் அதிகாரிகளுடன் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன தெரிவித்துள்ளார்.


இதனிடையே, இரவு நேரங்களில் பயணிக்கும் நீண்ட தூர சேவை பேருந்துகளை விசேட சோதனைக்கு உட்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


@CM

Tags

ads