Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டில் அதிகரிக்கும் காற்றின் வேகம் - கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!


நாட்டின் பல பகுதிகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

 

இதேவேளை, புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும். 

 

காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியங்கள், சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். 

 

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடலலையானது, சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை மேலெழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


@CM

Tags

ads