Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வாகன இலக்கத்தகடுகளுக்கு தட்டுபாடு!


வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். 

 

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

 

அத்துடன், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 

இதுவரை 15 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads