ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் அனுமதி
ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இறுதி முடிவு உயர் தேசிய பாதுகாப்பு பேரவையினால் எடுக்கப்படும் என ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாக குறித்த நீரிணை காணப்படுகிறது.
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் குறித்த பகுதியும் முக்கியம் பெறுவதால், எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் இதனூடாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
@CM