எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடக தொடர்பு கொள்ள முடியும்
தொலைபேசி எண்கள் : 011-2784208 / 011-2784537 / 0112785922
@CM