Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அரிசிக்கு தட்டுப்பாடா?


பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே இதனை தெரிவித்துள்ளார். 


இதன்படி 350,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் விவசாயம் மற்றும் கால்நடைகள் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவிடம் எமது செய்திச்சேவை வினவியபோது, இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.


பேராசிரியரின் கூற்று கணிப்பு மாத்திரமே என்றும் அடுத்த சில வாரங்களில் சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் சிறுபோகத்துக்காக பயிரிடப்பட்ட நெல் செழிப்பாக வளர்ச்சியடையவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

சிறுபோக நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரத்தின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.


@CM

Tags

ads