ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைத் தேடும் இலங்கையர்களுக்கான மொழித்திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த இலக்கை நோக்கி பணியகம் தீவிரமாக செயற்பட்டு வருவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனநாயக்க கூறியுள்ளார்.
ஜப்பானின் தாதியர் துறையில் இலங்கை பணியாளர்களுக்கான அதிக தேவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாதியர் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ் இதுவரையில், 600 இலங்கையர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், 51 பேர் குறிப்பிட்ட திறன் பணியாளர் திட்டத்தின் மூலம் தொழில்களைப் பெற்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
@CM