Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ரோபோக்களை உருவாக்கி குழந்தைகளை பெற்றெடுக்கும் முயற்சியில் சீனா!


வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

 

குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் என விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். 

 

இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


@CM

Tags

ads