இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கோழியொன்று நீல நிற முட்டையிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், "கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஒரு அரிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
@CM