தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2025) பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கோரிக்கைகள் நாளை (9) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இணையவழி முறைமை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பரீட்சார்த்திகள் தாம் கல்வி பயிலும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீளாய்வு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM